வீரசேகரவின் கருத்தைக் கண்டித்து முல்லைத்தீவு நீதிமன்ற முன்றலில் மாபெரும் போராட்டம்! – சட்டத்தரணிகள் அணிதிரள்வு.

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர நாடாளுமன்றத்தில் அண்மையில் உரையாற்றும்போது தமிழ் நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் தெரிவித்த இனவாதக் கருத்தைக் கண்டித்து வடக்கு மாகாண சட்டத்தரணிகளால் முல்லைத்தீவு நீதிமன்ற முன்றலில் இன்று கண்டனப் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்தப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் வடக்கு மாகாண சட்டத்தரணிகள் இன்று நீதின்ற வழக்குகளில் தோன்றாது பணிப்புறக்கணிப்பையும் மேற்கொண்டனர்.
வடக்கு மாகாணத்தில் மட்டுமன்றி கிழக்கு மாகாணத்திலும் மட்டக்களப்பு, கல்முனை, சம்மாந்துறை உள்ளிட்ட நீதிமன்றங்களின் சட்டத்தரணிகள் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் பணிப்புறக்கணிப்பையும் மேற்கொண்டு தமது முழுமையான ஆதரவை வழங்கினர்.