அரசியலுக்கு வராமல் கிரிக்கெட்டே விளையாடி இருக்கலாம்! – ஹர்ஷன எம்.பி. ஆதங்கம்.

நான் அரசியலுக்கு வராமல் கிரிக்கெட்டே விளையாடி இருக்கலாம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.
ஹர்ஷன ராஜகருணா எம்.பி. ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர். அதிலும் அவர் சிறந்த பந்து வீச்சாளர். அவர் படித்த கொழும்பு றோயல் கல்லூரி கழகத்தின் ஓப்பனிங் ப்வளராக இருந்து கலக்கியவர்.
அந்தச் சுவையான அனுபவங்களை அவரிடம் ஊடகவியலாளர்கள் கேட்டபோது அரசியலுக்கு வராமல் கிரிக்கெட்டே விளையாட்டி இருக்கலாம் போல் தோணுகின்றது என்று பதிலளித்துள்ளார்.
அவ்வளவு மோசமானதாம் இந்த அரசியல் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.