யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் நினைவேந்தல்கள்
![](https://www.ceylonmirror.net/wp-content/uploads/2020/09/20200911_171919-scaled.jpg)
யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சட்டத்துறைச் செயலாளருமான பொன். சிவபாலனின் மற்றும் 32ஆவது நினைவு தினம் நேற்று(11) மாலை 5 மணியளவில் நினைவுகூரப்பட்டது.
யாழ்பாணம் நாச்சிமார் கோவிலடியில் அமைந்துள்ளதமிழர் விடுதலைக் கூட்டணி காரியாலயத்திற்கு வெளியில் குறித்த நினைவேந்தல்கள் இடம்பெற்றன.
குறித்த நினைவேந்தலில் மா.ஈஸ்வரன், க.பத்மநாதன், பொ.பத்மராஜா, மல்லிகா ராஜரட்ணம் ஆகியோரும் நினைவுகூறப்பட்டனர்.
கட்சிக்குள் இருந்த முறுகல் நிலை காரணமாக கட்சி அலுவலகத்தில் இடம்பெறவிருந்த குறித்த நிகழ்வுகள் இடம்பெறாது அலுவலகத்திற்கு வெளியில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.