சபாநாயகர் தலைமையில் நாளை கூடுகின்றது அரசமைப்புப் பேரவை!

அரசமைப்புப் பேரவையின் விசேட கூட்டம் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
காலை 9.30 மணிக்குச் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
குறித்த கூட்டத்தில் ஆணைக்குழு உறுப்பினர்களின் நியமனம் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.