உலக்கையால் தாக்கி மனைவியைக் கொலை செய்த கணவன்! – மதுபோதையில் வெறியாட்டம்.

உலக்கையால் தாக்கிக் குடும்பப் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பெண்ணின் கணவரே அவரைத் தாக்கிப் படுகொலை செய்துள்ளார்.
இந்தச் சம்பவம் புத்தளம் – மாதம்பை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.
அப்பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இந்தச் சம்பவத்தில் சாவடைந்துள்ளார்.
மதுபோதையில் வீட்டுக்கு வந்த கணவர், இந்த வெறியாட்டத்தைப் புரிந்துள்ளார் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலையாளியைக் கைது செய்துள்ள பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.