வெடித்து சிதறியது குளிர்சாதனபெட்டி – 06 சிறுவர்கள் உட்பட 10 பேர் உடல் சிதறி பலி.

பாகிஸ்தானில் வீடொன்றில் வைத்திருந்த குளிர்சாதனபெட்டி திடீரென வெடித்துச் சிதறியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உடல் சிதறி பலியான துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாகிஸ்தானின் வடகிழக்கு மாகாணமான பஞ்சாப்பின் தலைநகர் லாகூரில் உள்ள நூர் மஹல்லா என்ற பகுதி உள்ளது. இங்கு ஒரு வீட்டில் கூட்டுக் குடும்பம் ஒன்று வசித்து வந்தது.


இவர்கள் வீட்டில் குளிர்சாதனபெட்டி வைத்திருந்தனர். இந்த குளிர்சாதனபெட்டி நேற்று நள்ளிரவு 2 மணியளவில் அதிக சத்தத்துடன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியதால் அருகில் இருந்த மக்கள் பதற்றம் அடைந்தனர். இத்குறித்து தகவல் அறிந்த பொலிஸார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராடி தீயணை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் வீடு முழுவதும் சேதமடைந்தது. தீயை அணைத்த பின்னர், தீயணைப்புத்துறையினர் வீட்டிற்குள் நுழைந்தபோது, அந்த வீட்டில் வசித்தவர்களில் உடல்கள் சிதறிக் கிடந்துள்ளன.

அவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். திடீர் மின்கசிவு ஏற்பட்டு, நள்ளிரவில், குளிர்சாதனப்பெட்டி பயங்கர சத்தத்துடன் வெடித்ததாகவும், இதில், ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்த 7 மாதக் குழந்தை, 5 சிறுவர்கள் உள்ளிட்ட 10 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.