பிகாரில் மின்னல் பாய்ந்து ஒரேநாளில் 18 பேர் பலி!
பிகார் முழுவதும் மின்னல் பாய்ந்ததில் ஒரே நாளில் 18 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாநிலத்தில் பரவலான இடங்களில் கனமழை பெய்துவரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் பாய்ந்து ரோஹ்தாஸ் மாவட்டத்தில் 5 பேரும், அர்வாலில் 4, சரணில் 3, அவுரங்காபாத் மற்றும் கிழக்கு சம்பரனில் தலா இருவர், பாங்கா மற்றும் வைஷாலி ஆகிய மாவட்டத்தில் தலா ஒருவரும் பலியாகியுள்ளனர்.
உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்த மாநில முதல்வா் நிதீஷ் குமாா், அவா்களுக்கு இழப்பீடாக ரூ.4 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மோசமான வானிலை நிலவுவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அவா் அறிவுறுத்தியுள்ளாா்.
கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் மழையின்போது விவசாய நிலத்திற்கு செல்வது தவிர்க்கவும், வீட்டிற்கு மேல் செல்லும் மின்கம்பிகள் அருகில் செல்ல வேண்டாம், குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் ஏசி போன்ற மின்சாதனங்களைத் தொடவேண்டாம், மரத்தின் கீழ் மற்றும் மண் வீட்டிற்கு அருகில் நிற்க வேண்டாம் என்று பேரழிவு மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.