கவனக் குறைவால் ரயிலில் மோதி பெண்ணொருவர் சாவு!

ரயிலில் மோதி பெண்ணொருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
மருதானையில் இருந்து தெற்கு களுத்துறை நோக்கிப் பயணித்த 716 இலக்க ரயிலில் மோதியே குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
பாணந்துறை மற்றும் எகொடஉயன ரயில் நிலையங்களுக்கு இடையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ரயில் பாதையைக் கவனக் குறைவாகக் கடக்கும் போதே குறித்த பெண் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார் என்று பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 60 வயது மதிக்கத்தக்க பெண் என்றும், அவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.