குருந்தூர்மலையில் எவரும் வழிபடலாம்! – அங்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு விரைவில் தீர்வு என்கிறார் ரணில்.
“குருந்தூர்மலை ஒரு வழிபாட்டிடம். அங்கு யாரும் சென்று வழிபடலாம்.” இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
குருந்தூர்மலையில் நேற்றுமுன்தினம் வழிபடச் சென்ற தமிழ் மக்கள், பிக்குகள் – சிங்கள மக்கள் – பொலிஸாரால் இடையூறு விளைவிக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்டமை தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“குருந்தூர்மலை விவகாரத்தை வைத்து ஒரு தரப்பினர் அரசியல் இலாபம் தேட முற்படுகின்றனர். இன்னொரு தரப்பினர் மதக் கலவரத்தை ஏற்படுத்த முனைகின்றனர். இவையிரண்டும் தற்போதைய நிலைமையில் தேவையற்றவை.
குருந்தூர்மலை வழிபாட்டிடம். அங்கு எவரும் சென்று வழிபடலாம். இந்தநிலையில் அங்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண்பது எமது கடமை. சம்பந்தப்பட்ட இரு தரப்பினருடனும் நாம் கலந்துரையாடி தீர்வு பெற்றுக்கொடுப்போம்.” – என்றார்.