நடுவானில் ஏர் இந்தியா அதிகாரியை அறைந்த பயணியால் விமானத்தில் பரபரப்பு

நடுவானில் ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவரை சக பயணி அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 9ஆம் தேதி சிட்னி-தில்லி விமானத்தில் இருக்கையை மாற்றிக்கொள்வது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவன மூத்த அதிகாரி மற்றும் சக பயணி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரியை சக பயணி திடீரென கண்ணத்தில் அறைந்துள்ளார்.
விமானம் தில்லியில் தரையிறங்கிய பிறகு தாக்குதல் நடத்திய பயணி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நடுவானில் ஏர் இந்தியா அதிகாரியை சக பயணி அறைந்த சம்பவம் விமானத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.