கெஹலியவை சுகாதார அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கி சுயாதீன விசாரணை ஒன்றை நடத்த வேண்டும் – அனுர
நாட்டின் சுகாதாரத்துறை மற்றும் குறிப்பாக சுகாதாரத்துறையில் அதிகரித்துள்ள தரம் குறைந்த மருந்துகளை இறக்குமதி செய்வது பற்றிய நியாயமான சந்தேகங்களைக் கருத்திற்கொண்டு, கெஹலிய ரம்புக்வெல்லவை சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி, சுயாதீன விசாரணைகள் உடனடியாக நடத்தப்பட வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
“அமைச்சர் மற்றும் சில அதிகாரிகள் உட்பட பல குழுக்கள் பல்வேறு தரக்குறைவான மருந்துகளை இறக்குமதி செய்வதன் மூலம் தமக்கென கொஞ்சம் பணம் சம்பாதிக்கும் சூழ்நிலையை உருவாக்குகிறார்கள் என்பதில் நியாயமான சந்தேகம் உள்ளது. எனவே, சுகாதார அமைச்சரை நீக்கி, உடனடியாக சுதந்திரமான விசாரணை நடத்தி, இந்த உயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். ஏனென்றால் பார்வையற்றவராக இருந்தாலும் நஷ்டஈடு தருவதாக கெஹலிய ரம்புக்வெல்ல கூறியதை நான் பார்த்தேன்.
இரண்டு கண்களுக்கும் கொடுக்கக்கூடிய இழப்பீடு என்ன? இரண்டு கண்களுக்கும் செலுத்தக்கூடிய ஒரே இழப்பீடு பார்வையை மீட்டெடுப்பதுதான். அதற்கு இழப்பீடு கிடையாது. இதையெல்லாம் பணத்தின் அடிப்படையில் முடிவு செய்யலாம் என்று நினைக்கிறார்கள், மனிதர்கள் இறந்தாலும், பணத்தின் அடிப்படையில் இவற்றை முடிவு செய்யலாம் என நினைக்கிறார்கள். எனவே, இந்த திமிர் பிடித்த , மக்களின் உயிரைப் பற்றி கவலைப்படாத இந்த ஆட்சியாளர்களை விரட்டியடிக்க வேண்டும்.
கண்டியில் நேற்று (16) இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அனுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.