மீண்டும் சுகாதார அமைச்சராக ராஜித? – அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மீண்டும் சுகாதார அமைச்சராக நியமிக்கப்படக்கூடும் என கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராகி வருகின்றது.
இதற்கிடையில் கெஹலிய ரம்புக்வெல பதவி விலகக்கூடும் எனவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே கெஹலிய பதவி விலகினாலோ அல்லது நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் பதவி விலக்கப்பட்டாலோ புதிய சுகாதார அமைச்சராக ராஜித நியமிக்கப்படலாம் எனத் தெரியவருகின்றது.