சதம் விளாசிய தனஞ்செயா டி சில்வா- இலங்கை அணி முதல் இன்னிங்சில் 312.
பாகிஸ்தான்- இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய இலங்கை அணி, பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் முதலில் மளமள என விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணி 54 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. ஐந்தாவது விக்கெட்டிற்கு மேத்யூஸ் உடன் தனஞ்செயா டி சில்வா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இலங்கை அணியை சரிவிலிருந்து மீட்டது.
இருவரும் அரை சதம் அடித்து சிறப்பாக விளையாடினர். மேத்யூஸ் 64 ரன்கள் எடுத்திருக்கும்போது ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி ஐந்தாவது விக்கெட்டுக்கு 144 ரன்கள் சேர்த்
இதனால் இலங்கை முதல் நாள் ஆட்டம் முடிவில் 6 விக்கெட்டு இழப்பிற்கு 242 ரன்கள் எடுத்துள்ளது. தனஞ்செயா டி சில்வா 94 ரன்கள் உடன் களத்தில் இருந்தார். இதனையடுத்து இன்று 2-ம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே சமரவிக்ரமா 36 ரன்னில் அவுட் ஆனார்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தனஞ்செயா சதம் அடித்து அசத்தினார். அவர் 122 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற இலங்கை அணி முதல் இன்னிங்சில் 312 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் சாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, அப்ரார் அகமது தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.