இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் தேசிய விருது வழங்கும் விழா.
இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் 2022 ஆண்டுக்கான ஓய்வூதியத்திட்ட நடைமுறைப்படுத்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட இலக்கினை 100 சதவீதம் பூர்த்தி செய்தமைக்காக தேசியவிருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந் நிகழ்வானது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கி திருகோணமலையில் அமைந்துள்ள ஜெக்கப் ஹொட்டலில் நடைபெற்றது.
முன்னாள் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.விமலநாதன் அவர்களிடம் தேசிய விருதினை சமூக பாதுகாப்பு சபையின் தலைவர் வழங்கி வைத்திருந்தார். இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன் (நிர்வாகம்) , உதவி மாவட்ட செயலாளர் திருமதி.லிசோ கேகிதா ,முன்னாள் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.ம.வில்வராஜா , மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திரு.மு.முபாரக் ,சமூக பாதுகாப்பு சபையின் மாவட்ட இணைப்பதிகாரிகளான திரு.க.சஞ்ஜீவன், திரு.அ.ற.மு.அஸ்லம் , சமூக பாதுகாப்பின் மாவட்ட உத்தியோகத்தர் திரு. சி.தேவானந் ஆகியோருக்கு இவ் அடைவு மட்டத்திற்க்கான தேசிய விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
மேலும் இவ் விருது வழங்கும் விழாவில் 2022 ஆண்டுக்கான தேசிய அடைவு மட்டத்தினை (1000) பூர்த்தி செய்தமைக்காக தேசிய விருதுகள் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேச செயலகங்களுக்கு வழங்கிவைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் தேசிய விருதுகளுக்குரிய ஏனைய மாவட்ட அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் சமூக பாதுகாப்பு சபையின் உயர்மட்ட அதிகாரிகள், மாவட்ட உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.