கிரிமியா பாலம் மீது மீண்டும் தாக்குதல்; 2 பேர் பலி – அதிகரிக்கும் பதற்றம்.
ரஷ்யாவினால் இணைத்துக்கொள்ளப்பட்ட, உக்ரேனின் கிரைமியா பிராந்தியத்தையும் ரஷ்ய பெருநிலப்பரப்பையும் இணைக்கும் கிரைமியா பாலத்தில் இடம்பெற்ற சம்பவத்தினால் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று திங்கட்கிழமை காலை கிரைமியா பாலத்தில் அவசர நிலையொன்று ஏற்பட்டதாக தகவல் கிடைத்தது என ரஷ்யாவின் பெல்கோரொட் பிராந்திய ஆளுனர் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் ஒரு தம்பதியினர் கொல்லப்பட்டதாகவும், அவர்களின் மகள் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேசமயம் பாலத்தின் கிரைமியா பகுதி சேதமடைந்துள்ளதாக ரஷ்ய போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இசம்பவம் தொடர்பான விபரங்களை அவ்வவமைச்சு தெரிவிக்கவில்லை. கிரைமியாவையும் ரஷ்யாவின் க்ராஸ்னோடார் பிராந்தியத்தையும் இணைக்கும் இப்பாலத்தில் மேற்படி சம்பவத்தைடுத்து, போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக ரஷ்ய அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.