பாடசாலை விடுமுறை தொடர்பில் விசேட அறிவிப்பு.

பாடசாலை முதலாம் தவணை முடிவடையும் திகதி மற்றும் பாடசாலை இரண்டாம் தவணையின் முதற்கட்ட ஆரம்பம் குறித்த விசேட அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
அதன்படி, அரசாங்க மற்றும் அரசாங்க அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணை ஜூலை மாதம் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகிறது.
அத்துடன் இரண்டாம் தவணைக்கான முதற்கட்ட பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஜூலை மாதம் 24 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.