கட்டுநாயக்கவிற்கு வந்த விமானத்தால் வீடுகளின் கூரைகள் சேதம்.
சிங்கப்பூரில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட விமானம் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்ட போது விமானம் மிக தாழ்வாக பறந்ததால் விமானி விமானத்தை மேலே உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளார்.
அந்த விமானத்தில் 292 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் இருந்தனர், விமானம் தாழ்வாக இறங்கியவுடன், விமானத்தின் உள்ளே பயணிகளின் பாதுகாப்பிற்காக விமானி விமானத்தை உயர்த்தினார்.
மீண்டும் விமானம் திடீரென வானத்தை நோக்கி எழுந்தமையால் மரங்கள் சரிந்து விழுந்ததுடன் விமானத்தில் இருந்து வெளியேறும் அதிக அழுத்தம் காரணமாக கீழே உள்ள பல வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிந்துள்ளதாக நீர்கொழும்பு மாவட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
தாகொன்ன கொடல்ல முதல் கடவல மங்களராம விகாரை வரையிலான சுமார் 05 கிலோமீற்றர் பரப்பளவில் அமைந்துள்ள சொத்துக்கள் மற்றும் வீடுகள் அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும், இது தொடர்பில் கட்டான பொலிஸ் மற்றும் கட்டுநாயக்க இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபைக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். .