இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக ஜனாதிபதி இந்தியா பயணம்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (20) இந்தியா செல்கிறார்.
அதில், ஜனாதிபதி, இந்திய அரசு மற்றும் இலங்கை இடையே கடன் மறுசீரமைப்பு தொடர்பாக பல சிறப்பு கலந்துரையாடல்கள் நடைபெற உள்ளதாகவும், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளின் போது வழங்கப்படும் ஆதரவு குறித்து இந்திய பிரதமர் உள்ளிட்ட உயரதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடி, நீண்டகாலமாக வழங்குவதற்கான புதிய பேச்சுவார்த்தைகளை தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இரு நாடுகளுக்குமிடையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட உள்ளதாகவும், இந்த விஜயத்தின் போது இந்திய ஜனாதிபதி , பல விசேட பிரதிநிதிகளை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.