நாமல் , திருமண நாளில் ஆண் குழந்தைக்கு தந்தையானார்

விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சரும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வருமான நாமல் ராஜபக்ச இன்று ஆண் குழந்தையொன்றுக்குத் தந்தையாகியுள்ளார்.
கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி, லிமினியை நாமல் கரம் பிடித்திருந்தார்.
ஓராண்டு திருமண நாள் பூர்த்தியை இன்று கொண்டாடும் நாமல் – லிமினி தம்பதியினருக்கு இன்று ஆண் குழந்தையும் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.