தமிழகத்துக்கு ரூ.335 கோடி – மத்திய அரசு நிதி வழங்கல்..
கொரோனாவால் ஏற்பட்ட நிதிப் பற்றாக்குறைக் காரணமாக ஆறாவது தவணையாக, 6,195 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதில், தமிழகத்துக்கு மட்டும், 335 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் பற்றாக்குறையைச் சமாளிக்க, தமிழகம் உள்ளிட்ட, 14 மாநிலங்களுக்கு நிதியை மத்திய அரசு விடுவித்து உள்ளது.
இந்திய மாநிலங்களின் வரி வசூல் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 15வது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி, தவணை முறையில் மத்திய அரசு நிதியை மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது.
அதன்படி தமிழகம், கேரளா உள்ளிட்ட, 14 மாநிலங்களுக்கு ஆறாவது தவணையாக, 6,195 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது. தமிழகத்துக்கு, 335.42 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த, 14 மாநிலங்களில், அதிகபட்சமாக கேரளாவுக்கு, 1,276 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு தெரிவிப்பது யாதெனில், ”கொரோனா காலத்தில் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஆதாரங்களை வழங்கும் வகையில் இந்த நிதி விடுவிக்கப்பட்டுள்ளது” என்பதாகும்.