ரணில் – மோடி நேரில் சந்திப்பு! – முக்கிய விடயங்கள் தொடர்பில் பேச்சு.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான இரு தரப்பு பேச்சு இன்று நடைபெற்றது.
இந்தியாவுக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில், இந்திய வெளிவிவகார அமைச்சருடன் நேற்றிரவு பேச்சு நடத்தினார்.
இன்று காலை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இந்நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைப் புதுடில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இன்று பகல் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார, கலாசார மற்றும் பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துவது சம்பந்தமாக இதன்போது கலந்துரையாடப்பட்டன.
அத்துடன், அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் குறித்தும் இதன்போது பேசப்பட்டது.
இதேவேளை, பொருளாதார நெருக்கடியின்போது இலங்கைக்கு இந்தியா வழங்கிய உதவிக்கு மோடியிடம் ரணில் நன்றி தெரிவித்தார்.