வானில் பறக்கும் ஊர்திகளில் பயன்படுத்தப்படும் கறுப்பு பெட்டியின் பயன் என்ன?
கறுப்பு பெட்டி என்றால் நாம் பொதுவாக வானூர்தியில் காணப்படும் கறுப்பு நிற தகவல் சேமிப்பு பெட்டி என்றுதான் நினைத்துக்கொண்டிருக்கிறோம் ஆனால் நமக்கே தெரியாத பல சுவையான பல தகவல்கள் கறுப்பு பெட்டி தொடர்பாக உள்ளன.
கறுப்பு பெட்டி என்பது வானூர்தியில் தகவல் சேமிக்கப் பயன்படும் ஒரு தொழில்நுட்பக் கருவியாகும். வானூர்தி எதிர்பாராத இடருக்குள் சிக்கும்போது அது தொடர்பான காரணங்களை அறிவதற்கு/ஆராய்வதற்கு இக்கருவி பெரிதும் உதவும். இதனை கருப்புப் பெட்டி என்று அழைத்தாலும், இது செம்மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
கறுப்புப் பெட்டியை 1953 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் வாரன் என்பவர் கண்டுப்பிடித்தார். 1934 ஆம் ஆண்டு இவரின் தந்தை வானூர்தி இடரில் மறைந்தார். ஆனால் இடருக்கான காரணம் கடைசி வரை தெரியவில்லை. இதனால் வானூர்தி இடருக்குள் சிக்கும் போது அதற்கான காரணங்களை கண்டறிய வேண்டும் என்று ஆராய்சியில் ஈடுபட்டு கறுப்புப் பெட்டியை கண்டுபிடித்தார்.
வானூர்தியின் சேதம் குறைவான பின்பகுதியில் இவை பொருத்தப்பட்டிருக்கும். கருப்புப் பெட்டியில் இரு பகுதிகள் உண்டு:
ஒன்று வானூர்தி அறை குரல் பதிவி. இது கடைசி 2 மணி நேரத்திற்கு வானோடிகளுக்கும், தரைக்கட்டுப்பாட்டு மையத்துக்கும் இடையே நடக்கும் உரையாடல்களை பதிவு செய்து வைத்திருக்கும்.
இன்னொரு பகுதியான வானூர்தி தரவு பதிவி வானூர்தியின் விரைவு, பொறிகளின் செயல்பாடு, வானூர்தியின் பிற கருவிகளின் செயல்பாடு, வானூர்திக்குள் உள்ள காற்றழுத்தம் என கிட்டத்தட்ட 400 வகையான காரணிகளை பதிவு செய்யும்.
டைட்டானியம் எனும் மூலகத்தால் செய்யப்பட்ட இவை புவி ஈர்ப்பு விசையை விட 3400 மடங்கு விசையையும் 1000 0 C ஐவிடவும் அதிக வெப்பநிலையையும் தாங்கக் கூடியது. வானூர்தி இடர்க்குள் சிக்கினால் கருப்புப் பெட்டியிலிருந்து தொடர்ந்து சமிக்கைகள் வந்து கொண்டிருக்கும்.
கிட்டத்தட்ட 30 நாட்கள் வரை இந்த சைகைகள் வரும். இது சுமார் 13 பவுண்டுகள் எடையைக் கொண்டவையாகும். தண்ணீரில் விழுந்தாலும் தீயில் எரிந்தாலும் இதில் உள்ள தரவுகள் பாதுகாப்பாக இருக்கும். நீண்ட காலமாகவே கருப்புப் பெட்டி தண்ணீரில் விழுந்தால் மிதக்கும் தன்மையுடனும், எளிதில் திறக்கக் கூடிய வகையிலும் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
வானூர்தியின் கருப்புப் பெட்டி இரு பகுதிகளைக் கொண்டது, அதில் ஒரு பகுதி வானூர்தியின் அறைக்குள் உள்ள குரல் பதிவி [Cockpit voice recorder] மற்றொரு பகுதி வானூர்தித் தரவு பதிவி ஆகும். கருப்புப் பெட்டி வானூர்தியின் வால் பகுதியில் இது பொறுத்தப்பட்டிருக்கும். விமானம் இடருக்குள் சிக்கினால் அதிலிருந்து தொடர்ந்து சமிக்ஞைகள் வந்து கொண்டிருக்கும். கிட்டத்தட்ட 30 நாட்கள் வரை இந்த சமிக்ஞைகள் வரும், இந்த சமிக்ஞைகளை வைத்து இதன் இருப்பிடத்தை அறிந்து கொள்ளமுடியம்.
வானூர்தி அறை குரல் பதிவி வானோடிகளின் உரையாடலை பதிவு செய்வும் ஒரு கருவியாகும். இது கடைசி 2 மணி நேரத்திற்கு வானோடிகளுக்கும் தரைக்கட்டுப்பாட்டு மையத்துக்கும் இடையே நடக்கும் உரையாடல்களையும் பதிவு செய்து வைத்திருக்கும். இது செம்மஞ்சள் நிறத்தில் இருக்கும். இக்கருவி தண்ணீரில் விழுந்தாலும் தீயில் எரிந்தாலும் இதில் உள்ள தரவுகள் பாதுகாப்பாக இருக்கும்
வானூர்தி எவ்வளவு பெரிய இடருக்குள் சிக்கினாலும், முழுவதும் தீப்பிடித்து எரிந்தாலும், அல்லது கடலில் விழுந்து மூழ்கினாலும், இந்த கறுப்புப் பெட்டி எவ்வித சேதமும் இல்லாமல் தப்பிவிடும். அந்த அளவுக்கு பாதுகாப்பான முறையில் இது தயாரிக்கப்படுகிறது. பிறகு அதனுள் பதிந்திருக்கும் தகவல்களைக் கொண்டு வானூர்தி ஏன் இடருக்குள் சிக்கியது என்ற காரணத்தை அறியலாம்.
கறுப்பு பெட்டி தொடர்பான சில வியப்புக்குரிய தகவல்கள் :
கறுப்புப் பெட்டியின் உண்மையான நிறம் கருப்பு அல்ல செம்மஞ்சள நிறத்தில் காணப்படும்.
தீயினில்/உயர் வெப்பநிலை என்பவற்றால் எரிந்து சேதமுறாது.
உவர் நீரில் ஊறினாலும் பாதிப்படையாது.
கடலுக்குள் மூழ்கினாலும் மூன்று மாதங்களுக்குப் பழுதடையாது.
வானத்தில் இருந்து வீழ்ந்தாலும் உடையாது. எங்கு வீழ்ந்தாலும் அவ்விடத்தில் இருந்து தகவலை அனுப்பிக் கொண்டிருக்கும்.
வெளிப்புற, உட்புற தாக்கத்தினாலும் சேதமடையாதவாறு பெட்டியும் தகவல் சேமிப்பு நாடாவும் ஆக்கப்பட்டிருக்கும்.
ஒரு கறுப்புப் பெட்டி கடைசியாக நடந்த 25 மணி நேர வானூர்தியின் தகவல்களையும், 30 நிமிட விமானிகளின் உரையாடல்களையும் கொண்டிருக்கும்.
கறுப்புப் பெட்டியின் உறுதிக்கு காரணம் அலுமினியம், சிலிகா, டைட்டானியம், ஸ்டைன்லெஸ் ஸ்டீல் ஆகியவை கலந்த கலவையால் அது உருவாகப்படுவது தான்.
இடர் நடந்த பிறகு கறுப்புப் பெட்டியிலிருந்து “பீப்” என்ற ஒலி கேட்டுக்கொண்டே இருக்கும். இது பெட்டியை கண்டுபிடிக்க உதவுகிறது.
இது 2000 பாரன்ஹீட் வெப்பத்தையும் தாங்கும், 2000 கிலோ எடையுடைய பொருள் விழுந்தாலும், 30,000 அடி உயரத்திலிருந்து விழுந்தாலும் சேதமாகாது.
கறுப்புப்பெட்டியானது இனிமேல் மகிழுந்துக்குள் பொருத்தப்படப்போகிறது என்பது வியப்பான செய்தி. இதன் மூலம், மகிழுந்தில் ஏற்படும் இடர்களின் உண்மையான காரணம், காப்பீட்டு நிறுவனத்திற்கு உண்மையை விளக்கும் கருவியாக, காவல்துறையின் திறனாய்வில் போதும், அறமன்றங்களில் மதிப்பீட்டின் போதும், கறுப்பு பெட்டி ஓர் சாட்சியாக செயல்படக்கூடிய முதன்மையான கருவியாக பயன்படும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.