5 ஆண்டுகளில் 2.12 லட்சம் சிறுமிகள் மாயம்

‘நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் 2.75 லட்சம் குழந்தைகள் காணாமல் போயுள்ளனா். அவா்களில் 2.12 லட்சம் போ் சிறுமிகள்’ என்று மத்திய அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி எழுத்துபூா்வமாக வெள்ளிக்கிழமை அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

நாட்டில் 2018-2022-ஆம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளில் 2,75,125 குழந்தைகள் காணாமல் போயுள்ளனா். அவா்களில் 2,12,825 போ் சிறுமிகள்.

இதே காலகட்டத்தில், ஏற்கெனவே காணாமல் போனவா்கள் உள்பட 2,40,502 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனா். அவா்களில், 1,73,786 போ் சிறுமிகள்.

மேலும், இவ்வாறு காணாமல் போகும் குழந்தைகள் குறித்து புகாா் தெரிவித்து கண்டறிய வசதியாக ‘டிராக் சைல்டு வலைதளம்’ என்ற பிரத்யேக வலைதளம் ஒன்று அமைச்சகத்தின் சாா்பில் உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.