மரம் முறிந்து விழுந்ததில் இருவர் மரணம்! – மூவர் படுகாயம்.

மரம் முறிந்து விழுந்ததில் இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் அம்பலாங்கொடை – அக்குரஸ்ஸ பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் வீசிய கடும் காற்றால் மரமொன்று முறிந்து வாகனம் பழுது பார்க்கும் நிலையத்தின் மீது விழுந்ததில் இருவர் உயிரிழந்ததோடு மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர் என்று அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.