வந்தே பாரத் ரயிலில் சிறுநீர் கழிக்க சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!
மத்திய பிரதேசத்தில் உள்ள சிங்ராலியில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த சம்பவத்தில் இருந்து பாடம் கற்று கவனமாக இருக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.
ஒருவரது அலட்சியத்தால் நடந்தது போன்ற சம்பவம் உங்களுக்கு நடக்கக்கூடாது. இந்த பாடத்தை சம்பந்தப்பட்ட நபரும் அவரது குடும்பத்தினரும் வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருப்பார்கள்.
சிங்ராலியில் வியாபாரம் செய்யும் நபர் ஒருவர் சிறுநீர் கழிப்பதற்காக போபால் நிலையத்தில் நின்று கொண்டிருந்த, வந்தே பாரத் ரயிலில் ஏறினார். இந்த அலட்சியத்தால் அவர் ரூ.6,000 இழக்க வேண்டியிருந்தது. பணம் போனது மட்டுமின்றி, குடும்ப உறுப்பினர்களும் மணிக்கணக்கில் மன உளைச்சலுக்கு ஆளாகி, நேரமும் வீணானது.
இந்த சம்பவம் சிங்ராலியின் பைதானில் வசிக்கும் அப்துல் காதர் என்பவருக்கு நடந்துள்ளது.
அப்துல் காதர், சிங்ராலியில் உலர் பழ வியாபாரம் செய்து வருகிறார். இது தவிர ஹைதராபாத்தில் உலர் பழக் கடையும் வைத்துள்ளார். பேகம் பஜாரில் ஜாஃப்ரன் ஹவுஸ் என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார்.
அவரும் அவரது மனைவியும், மகனும் ஹைதராபாத்தில் இருந்து சிங்ராலிக்கு ஜூலை 14ஆம் தேதி தக்ஷின் எக்ஸ்பிரஸ் மூலம் வந்து கொண்டிருந்தனர். ரயிலின் இரண்டாவது ஏசி வகுப்பில் காதர் குடும்பத்தினர் பயணம் செய்தனர். அடுத்த நாள், ஜூலை 15 மாலை அப்துல் போபால் ஸ்டேஷனுக்கு வந்தார்.
அவர்கள் பயணம் செய்த ரயில் மாலை 5:20 மணிக்கு ஸ்டேஷனை வந்தடைந்தது.
அதன்பின் 8:55-க்கு சிங்ராலி செல்லும் ரயிலைப் பிடிக்க வேண்டும். சிங்ராலிக்கு ரயில் வருவதற்குள் உணவு உண்டு விடலாம் என்று அவர்கள் நினைத்தனர். உணவகத்திற்குச் செல்வதற்கு முன், அப்துல் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று நினைத்தார். வேறு எங்காவது செல்வதை விட தனக்கு முன்னால் நிற்கும் ரயிலில் ஏறி அதிலுள்ள கழிப்பறையை பாவித்து சிறுநீர் கழிக்கலாம் என நினைத்தார். எனவே சிறுநீர் கழிக்க தனக்கு முன் நின்றுகொண்டிருந்த ரயிலில் ஏறினார்.
அவர் ஏறிய ரயில் வந்தே பாரத் என்ற நாட்டின் நவீன ரயில் என்பது அவருக்குத் தெரியாது.
கழிவறைக்கு சென்றவுடன் ரயிலின் கதவுகள் தானாக மூடப்பட்டு ரயில் கிளம்பியது.
ரயில் கிளம்பியவுடன் அப்துல் காதர் பயந்து போனார். ரயிலுக்குள் இருந்த ரயில்வே ஊழியர்களின் கை, கால்களை கட்டிப் போட்டு ரயிலை நிறுத்த முயற்சித்தார் அப்துல், ஆனாலும் பலனில்லை.
ரயில் உஜ்ஜயினியில் தான் நின்றது. போபாலில் இருந்து உஜ்ஜயினிக்கு வெர் பயணித்ததற்காக ரூ.1020 கட்டணத்தை TTR வசூலித்தார்.
இதையடுத்து உஜ்ஜயினியில் இருந்து போபாலுக்கு பஸ்சில் சென்றார் அப்துல்.
இதற்காக ரூ.750 செலுத்த வேண்டி வந்தது.
மறுபுறம், அவர் சிங்ராலி செல்லும் ரயிலையும் தவறவிட்டார். இதனால் அவருக்கு 4 ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இச் சம்பவத்தில் அவருக்கு 6 ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதோடு , மன உழைச்சலுக்கும் ஆளானார்.
சிறுநீர் கழிக்க அவர் இனி கண்ட கண்ட ரயில்களில் ஏற மாட்டார் என நம்பலாம். நீங்கள் எப்படி?