லண்டனில் சீன யுவதிக்கு சாராயம் கொடுத்து உறவு கொண்ட இலங்கைத் தமிழன் சயந்தனுக்கு 11 வருட கடூழிய சிறை!!
மத்திய லண்டனில் உள்ள தனது புகைப்பட கலையகத்தில் சீன நாட்டு யுவதியொருவரை பாலியல் பலாத்காரம் செய்த புகைப்படக் கலைஞரான இலங்கைத் தமிழருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஹெண்டன் கிரவுன் நீதிமன்றத்தில் ஏழு நாள் விசாரணையின் முடிவில் இரண்டு பாலியல் வல்லுறவு மற்றும் ஒரு பாலியல் வல்லுறவு முயற்சியில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பின்னர் வெள்ளிக்கிழமை (21) 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.ஃபிட்ஸ்ரோவியாவின் சார்லட் தெருவைச் சேர்ந்த 42 வயதான ஸ்ரீதரன் சயந்தன் (15.03.81) என்பவருக்கே சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அவர் விடுவிக்கப்பட்டதும் அவர் மீது பாலியல் தீங்கு தடுப்பு ஆணையும் விதிக்கப்படும்.
பாதிக்கப்பட்ட பெண், 30 வயதுடையவர், மே 2022 இல் ப்ரோம்ப்டன் சாலையில் உள்ள சயந்தனின் ஸ்டுடியோவிற்குச் சென்று படங்களை எடுப்பதற்காக பணம் கொடுத்தார். பின்னர் ஒன்லைன் மூலமாக அந்த யுவதியை தொடர்பு கொண்ட சயந்தன், ஜூலை 8 ஆம் திகதி மீண்டும் சந்திக்க அழைத்தார்.
மொடலிங் தொடர்புடைய புகைப்பட செயல்முறையின் ஒரு பகுதியான சந்திப்பு என தான் நினைத்ததாக அந்த சீன யுவதி குறிப்பிட்டுள்ளார்.
வாரன் தெருவில் உள்ள ஒரு மதுபான விடுதியில் அவர்கள் சந்தித்தனர். “அங்கு சயந்தன் சீன யுவதியை மது அருந்துமாறு ஊக்கப்படுத்தினார், இதனால் அந்தப் பெண் மிக விரைவாக போதையில் ஆழ்ந்தார்” என்று பொலிசார் தெரிவித்தனர்.“பின்னர் அவர் பாதிக்கப்பட்டவரை தனது ஸ்டுடியோவிற்கு அழைத்துச் சென்றார். இங்கே ஸ்டுடியோ விளக்குகளை அணைத்து, அவரை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கினார். அவர் ஓரளவு விழித்திருந்தபோது சயந்தன் தன்னை பாலியல் ரீதியாகத் தாக்கியதை அறிந்தார். அனால் அவரால் வாய்மொழியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ பதிலளிக்க முடியவில்லை.” என பொலிசார் தெரிவித்தனர்.
இறுதியின் சயந்தன் தனது ஆடைகளை அணிவதை கண்ட யுவதி எழுந்தார். நடக்க சிரமப்பட்ட யுவதியை, சயந்தனே பேருந்து நிலையத்துக்கு அழைத்து சென்றார்.
பாதிக்கப்பட்ட, ஒரு சீன நாட்டவர், 31 ஜூலை 2022 அன்று காவல்துறைக்கு சென்றார்.
இங்கிலாந்தில் பாலியல் வல்லுறவு எவ்வாறு விசாரிக்கப்படுகிறது என்பது பற்றி சீன யுவதிக்கு தெரியாததால் அவர் முன்னதாகவே பொலிசிற்கு செல்லவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய வடக்கு கட்டளையின் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட பெண் வாரன் ஸ்ட்ரீட் ஸ்டேஷனுக்கு வந்து, நான்கு மணி நேரம் கழித்து மீண்டும் ஸ்டேஷனுக்கு வந்ததைப் போன்ற லண்டனுக்கான போக்குவரத்து சிசிடிவி காட்சிகளை அவர்கள் கண்டுபிடித்தனர். சயந்தன் பாதிக்கப்பட்டவரை அழைத்துச் வந்த காட்சிகள் உள்ளன. பாதிக்கப்பட்டவர் போதையில் சுயமாக நிற்க முடியாமல் தள்ளாடிக் கொண்டிருந்தார்.அவரது முறைப்பாட்டையடுத்து, சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டவுடன் அவர் செப்டம்பர் மாதம் முன் திட்டமிடப்பட்ட வாரண்டின் போது கைது செய்யப்பட்டார். ஸ்டுடியோ ஊழியர்களிடமிருந்து அறிக்கைகள் சேகரிக்கப்பட்டன. விசாரணையின் போது, சந்தேக நபருக்கு சொந்தமான பல புகைப்பட நிலையங்கள் இருந்தது தெரிய வந்தது.
துப்பறியும் கான்ஸ்டபிள் சோஃபி பேக்கர் கூறுகையில், “சயந்தனால் பாதிக்கப்பட்டவர்கள் வேறு இருக்கலாம் என்று அதிகாரிகள் நம்புகிறார்கள்” மேலும் “எங்களுடன் பேச விரும்பும் எவரையும் முன்வருமாறு” ஊக்குவிப்பதாக கூறினார்.