இந்திய எம்.பிக்கள் சம்பளம் 30%குறைப்பு
இந்திய பார்லிமென்ட் மழைக்கால கூட்டதொடரில், 23 புதிய மசோதாக்களை அறிமுகம் செய்து, நிறைவேற்ற மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, எம்.பி.,க்கள் சம்பளத்தை, 30 சதவீதம் குறைப்பது உட்பட, 11 மசோதாக்கள், அவசர சட்டத்தை மாற்றுவதற்காக கொண்டுவரப்படும் மசோதாக்களாகும்.
அரசியல் சாசனப்படி, ஆறு மாத இடைவெளிக்குள், பார்லிமென்டை கூட்ட வேண்டும்.பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர், கொரோனா பரவல் காரணமாக, திட்டமிட்டதற்கு முன், மார்ச், 23ல் க்டந்த கூட்டத் தொடர் முடிந்தது.
இதனால், பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரைக் கூட்டுவது தொடர்பாக, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவும், ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடுவும், லோக்சபா, ராஜ்யசபா செயலர்கள் உட்பட அதிகாரிகளுடன், பலமுறை ஆலோசனை நடத்தினர்.இதையடுத்து,
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன், பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்தனர். வரும், 14ம் தேதி முதல், அடுத்த மாதம், 1ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த கூட்டத்தொடரில், மத்திய அரசு, 23 புதிய மசோதாக்களை அறிமுகம் செய்து நிறைவேற்றிட திட்டமிட்டுள்ளது. இதில், 11 மசோதாக்கள், ஏற்கனவே நடைமுறையில் இருக்கும், அவசர சட்டங்களுக்கு மாற்றாக கொண்டுவரப்படுகின்றன.
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்களை தாக்கினால், ஏழு ஆண்டு சிறை தண்டனையும், ஐந்து லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கும் அவசர சட்டம் இயற்றப்பட்டது.
வைரஸ் பரவலைத் தடுக்கத் தேவையான நிதி திரட்டலுக்காக, எம்.பி.,க்கள் ஊதியம் ஓர் ஆண்டுக்கு, 30 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது தொடர்பாக ஒரு அவசர சட்டம் இயற்றப்பட்டது.
விவசாயிகள் உற்பத்தி வர்த்தக ஊக்குவிப்புக்காக, விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எங்கு வேண்டு மானாலும் விற்பனை செய்யலாம் என்ற அவசர சட்டத்துக்கு மாற்றாகவும், மசோதா அறிமுகமாகிறது.
இவ்வறாக 23 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டு, நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இப்படி முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றபட உள்ளன.