ஆகஸ்ட் 31 முதல் நோர்வேத் தூதரகத்துக்குப் பூட்டு!

கொழும்பில் உள்ள இலங்கைக்கான நோர்வேத் தூதரக அலுவலகத்தை எதிர்வரும் 31 ஆம் திகதியிலிருந்து மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்தத் தூதரகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தள பக்கத்தில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுடனான இரு தரப்பு தொடர்புகளை இந்தியாவின் புதுடில்லியில் உள்ள நோர்வேத் தூதரக அலுவலகத்தின் ஊடாக முன்னெடுக்கவுள்ளதாக கொழும்பில் உள்ள நோர்வேத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.