முதலமைச்சர் அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்… மேகாலயாவில் பரபரப்பு!
மேகாலயா மாநில முதலமைச்சரின் அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேகாலயாவின் குளிர் கால தலைநகராக ‘துரா’ நகரத்தை அறிவிக்க வலியுறுத்தி ‘கரோ’ மலைப்பகுதியைச் சேர்ந்த அமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, துரா நகருக்குச் சென்ற முதலமைச்சர் கான்ராட் சங்மா, போராட்ட குழுவின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, திடீரென ஒரு கும்பல் முதலமைச்சரின் அலுவலகம் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. சிறிது நேரத்தில் நிலவரம் கட்டுக்குள் வரப்பப்பட்டாலும், இந்த தாக்குதலில் காவலர்கள் 5 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் கான்ராட் சங்மா கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து பேசிய இவர், தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என போராட்டக்காரர்கள் கூறியதாகவும், காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் எனவும் கூறினார்.