விவசாய நிலத்தை தோண்ட தோண்ட கிடைக்கும் வைரம்…அதிசயிக்க வைக்கும் கிராமம்…!
மழை காலத்தில் விவசாய நிலங்களில் வைரம் கொழிக்கும் கிராமம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து ஆச்சரியப்பட வைத்துள்ளது.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஜே எறகுடி கிராமத்தில் பெண் ஒருவருக்கு அவருடைய விவசாய நிலத்தில் சுமார் 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைரம் கிடைத்ததாக தெரியவந்துள்ளது. கர்னூல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் மழைக்காலத்தின் போது விவசாய நிலங்களில் வைரம் கிடைப்பது வழக்கம்.
இதனால் மழை பெய்ய துவங்கியவுடன் கிராம மக்கள் விளை நிலங்களில் வைர வேட்டையில் ஈடுபடுவார்கள். அப்படி கிடைக்கும் வைரங்களை வட மாநிலத்தை சேர்ந்த வியாபாரிகள் கர்னூல் மாவட்டத்திற்கு வந்து பொதுமக்களிடம் இருந்து ரகசியமாக வாங்கி செல்வது வழக்கம்.
இந்த நிலையில் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஜே எறகுடி கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு அவருடைய விவசாய நிலத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வைரம் ஒன்று கிடைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த வைரத்தை வியாபாரிகள் தங்களுக்குள் கூட்டணி அமைத்து மிகவும் குறைந்த விலைக்கு 12 லட்சம் ரூபாய்க்கு வாங்கி சென்று விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
பழங்காலம் முதலே, ஆந்திராவின் ராயல் சீமா பகுதியில் இது போல் விளைநிலங்களில் வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள் கிடைப்பதால் இந்த பகுதிக்கு ‘ராயலசீமா ரத்தனால சீமா’ என்ற பெயரும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.