யமுனை ஆற்றில் சிக்கிய டால்பினை சமைத்து சாப்பிட்டவர்கள் கைது
யமுனை ஆற்றில் மீன் பிடிக்க சென்ற போது எதிர்பாராத விதமாக வலையில் சிக்கிய டால்பினை சமைத்து சாப்பிட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சில நாட்களாக தென்மேற்கு பருவக்காற்றால் வட மாநிலங்களான, உத்தர பிரதேசம், டெல்லி, உத்தர காண்ட், மத்திய பிரதேசம், குஜராத் போன்ற இடங்களில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் யமுனை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்நிலையில், கடந்த ஜூலை 22ஆம் திகதி காலை யமுனையில் நசீர்பூர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் வீசிய வலையில் டால்பின் மீன் சிக்கியுள்ளது.
பின்பு, அவர்கள் அதனை தோளில் போட்டுக் கொண்டு தெருவில் சென்றுள்ளனர். இதனையடுத்து, அதனை வீட்டிற்கு எடுத்துச் சென்று சமைத்து சாப்பிட்டுள்ளனர்.
இதனை, சாலையில் நின்று கொண்டிருந்தர்வர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
யமுனை ஆற்றில் டால்பின் மீன்கள் அரிதாக கிடைப்பதில்லை. ஆனால், எதிர்பாராமல் சிக்கிய டால்பினை தெருவில் கொண்டு சென்றவர்களின் வீடியோ பரவியது.
இந்நிலையில், டால்பினை பிடித்து சாப்பிட்டதாக நான்கு மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
பின்பு, சமூக ஊடகங்களில் வைரலான இந்த சம்பவத்தின் வீடியோவை கவனத்தில் கொன்று ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் ரஞ்சீத் குமார், சஞ்சய், தீவன், பாபா ஆகியோர் மீது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் (1972) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில், ரஞ்சீத் குமார் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மீதமுள்ள குற்றவாளிகளைப் பொலிசார் தேடி வருகின்றனர்.