13 குறித்து JVP ஹரிணியும் டில்வினும் இருவேறு கருத்துடையவர்களா? – மொகமட் முசாமில்
JVPயினர் ’13ஐ முழுமையாக அமல்படுத்த வேண்டும்’ என்ற கதையைக் கேட்டாலே ஒளிந்து கொள்கிறார்கள். அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தம் குறித்து அவர்களுக்கு ஒரு கருத்து இல்லை. பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய முன்னதாக தெரிவித்தார். ஜே.வி.பி தலைவர்கள் இது குறித்து அப்போது மௌனமாக இருந்தனர்.
தற்போது ஜனாதிபதி சர்வகட்சி மாநாட்டை கூட்டியுள்ள நிலையில், ‘அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய அனைத்து அதிகாரங்களையும் பொலிஸ் அதிகாரங்கள் பின்னர் பரிசீலிக்கும் வரை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணங்கியுள்ளார்’ என பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறும்போது, ஹரிணி அமரசூரியவும் அதனையே பகிர்ந்து கொள்கின்றாரா?
ஒரு கருத்தை கூற முடியாத காரணத்தால், டில்வின் சில்வாவிடம், ’13ஐ முழுமையாக அமல்படுத்துவது குறித்து உங்கள் கருத்து என்ன? எனக் கேட்கிறோம். திசைகாட்டி மற்றும் (JVP) மணியிடம் ஒரு கருத்தை எதிர்பார்ப்பது தவறு. இன்று அவர்களுக்குள் ஒருமித்த கருத்து இல்லை. இந்த முக்கியமான பிரச்சினையில் இருவரும் ஒரே கருத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதால், ‘சர்வ கட்சி மாநாட்டிற்கு நாங்கள் வரமாட்டோம்’ என்று சுனில் ஹந்துன்நெத்தி கூறுகிறார்.
இன்று ‘சூழ்ந்துள்ள பிரச்னைகளை’ ‘குதர்க்க பேச்சு’ கொடுத்து மையப் பிரச்னைகளைத் தவிர்க்கும் அரசியலை செய்கின்றனர். மையப் பிரச்சினைகளைத் தவிர்த்து அழகான முழக்கங்களை எழுப்பும் அரசியல் இயக்கத்தின் பயணம் குறுகியது என்பதைச் சொல்லத் தேவையில்லை என மொகமட் முசாமில் தெரிவித்துள்ளார்.