நிபந்தனைகளுடன் இணைய சேவைக்கான தடையை நீக்கிய மணிப்பூர் அரசு…
மணிப்பூரில் நிபந்தனைகளுடன் கூடிய இணைய சேவை மணிப்பூர் அரசாங்கம் தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக மணிப்பூர் அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், கடந்த மார்ச் 3 ஆம் தேதி முதல், முடக்கப்பட்ட இணைய சேவைகளால் பல்வேறு அத்தியாவசிய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, முதற்கட்டமாக தரைவழி இணைய சேவைக்கு (Wireline broadband connection) மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதே சமயம், மொபைல் இணைய சேவை, சமூக வலைதள பயன்பாடு உள்ளிட்டவற்றிற்கு தடை நீடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தரைவழி இணைய சேவைகள் பெரும்பாலும் அரசு நிறுவனங்கள் மற்றும் வசதி படைத்தவர்கள் மட்டுமே பயன்படுத்தி வருவதாகவும், மணிப்பூர் அரசின் இந்த உத்தரவால் வெகுசன மக்களின் அடிமட்டத் தேவைகளைப்பூர்த்தி செய்யும் வகையில் இல்லை என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மேலும், அம்மக்களின் இணைய சேவை பயன்பாட்டை நேரடியாக அதிகாரிகள் கண்காணிக்க முடியும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டிருப்பதையும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக் காட்டி வருகின்றனர்.
இதற்கிடையே, மணிப்பூர் பிரச்னை தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும், ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் சஞ்சய் சிங்-ஐ சஸ்பெண்ட் செய்யும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.