வரலாற்று சாதனை படைத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்?
141 ஆண்டு கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் வீரர் சவுத் ஷக்கில் புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறார்.
அதாவது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் ஏழு டெஸ்ட் போட்டிகளில் 50 ஓட்டங்களுக்கு மேல் அடித்த வீரர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டியிலே இந்த சாதனையை படைத்துள்ளார்.
இவர் டெஸ்ட் போட்டிகளில் குவித்த ஓட்டங்கள் பின்வருமாறு
முதல் டெஸ்ட் போட்டி- 76 ஓட்டங்கள்
இரண்டாம் டெஸ்ட் போட்டி- 63 மற்றும் 94 ஓட்டங்கள்
மூன்றாம் டெஸ்ட் போட்டி- 53 ஓட்டங்கள்
நான்காம் டெஸ்ட் போட்டி- 55 ஓட்டங்கள்
ஐந்தாம் டெஸ்ட் போட்டி- 125 ஓட்டங்கள்
ஆறாம் டெஸ்ட் போட்டி- 208 ஓட்டங்கள்
ஏழாம் டெஸ்ட் போட்டி- 58 ஓட்டங்கள்.