வலி நிவாரணி மாத்திரை விற்பனையாளர்களுக்கு டெல்லி அரசு அறிவுறுத்தல்

கொசுக்களினால் பரவும் மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் டெல்லியில் அதிகரித்து வருகின்றன. இதற்காக தடுப்பு நடவடிக்கைகளை டெல்லி அரசு அறிவுறித்தியுள்ளது.

டெங்கு, மலேரியா, சிக்கன் குனியா போன்ற நோய்களினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மக்கள் பொதுவாக பயன்படுத்தும் ஆஸ்ப்ரின், இபுபுரொஃபைன் போன்ற மாத்திரைகளை விற்பனை செய்வது தொடர்பாக மருந்தாளுனர்களுக்கு டெல்லி அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் இந்த மருந்துகளை மக்களுக்கு விற்பனை செய்யாதீர்கள் என அரசாங்கம் கூறியுள்ளது.

அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்:

“மழைக் காலங்களில் கொசுக்களினால் பரவும் டெங்கு, சிக்கன்குனியா போன்ற நோய்கள் அதிகரித்து வருவதை அனைவரும் அறிந்திருப்பீர்கள். மழைக்காலத்திற்கு முன்பும் பின்பும், இந்நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதைத் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இதனால் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஆஸ்ப்ரின், இபுபுரொஃபைன் மற்றும் ரத்தத்தட்டுகளை குறைக்க வாய்ப்புள்ள டைக்ளோடெனாக் போன்ற மாத்திரைகளை அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் மருந்தாளுனர்கள் யாரும் விற்பனை செய்யக் கூடாது. மேலும் இந்த வகையில் வரக்கூடிய அத்தனை வலி நிவாரணி மாத்திரைகளின் கையிருப்பு குறித்தும் பதிவு செய்து வைத்திருக்க வேண்டும்” என மருந்துகள் கட்டுபாடு துறை அறிவுறுத்தியுள்ளது.

நமது ரத்தத்தட்டுகளை குறைக்கும் மாத்திரைகள் :

டெல்லி அரசாங்கம் அறிவுறுத்தியுள்ள மாத்திரைகள் அனைத்தும் நோயாளிகளின் ரத்தத்தட்டுகளை குறைக்கக் கூடியவை. இருந்தும், டெங்கு மற்றும் மலேரியா நோயாளிகளுக்கு ஏற்படும் வலியுடன் கூடிய காய்ச்சலை குறைக்க இந்த மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த மருந்துகள் வலியையும் வீக்கத்தையும் கட்டுப்படுத்தும். அதனால் தான் இவை நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படுகின்றன. சில சமயங்களில் மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் மக்களே வாங்கிக் கொள்கிறார்கள். இது பொதுவாக கிடைக்கும் மருந்துகள் என்பதால் மருந்தாளுனர்களும் எளிதாக கொடுத்துவிடுகிறார்கள்.

ஒட்டுண்ணிகளால் பரவும் நோய்கள் :

இந்த நோய்கள் யாவும் கொசுக்கள் போன்ற ஒட்டுண்ணிகளால் பரவுகிறது. மலேரியா, டெங்கு, சிக்கன் குனியா, ஜிகா, ஜப்பானிய மூளைக்காய்ச்சல், யானைக்கால் நோய், கருங்காய்ச்சல் போன்றவை ஒட்டுண்ணிகளால் பரவக்கூடிய பொதுவான நோய்களாகும். உலகளவில் 17 சதவீதம் தொற்றுகளுக்கு காரணமாக இருக்கும் ஒட்டுண்ணி நோய்கள் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்த தொற்று நோய்களில், கொசுக்களினால் பரவும் இந்த நோய்கள் 17 சதவிகித்தை பிடித்துள்ளதாக உலக சுகாதர நிறுவனம் கூறுகிறது. ஒவ்வொரு வருடமும் உலகளவில் மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சலுக்கு 4,00,000 மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதில் 40,000 பேர் இறந்து போகின்றனர். ஒவ்வொரு வருடமும் உலகளவில் மலேரியா, டெங்கு, ஜப்பானிய மூளைக்காய்ச்சல், ஸ்கிஸ்டோசோமியாசிஸ், கருங்காய்ச்சல், ரத்த ஒட்டுண்ணி நோய் மற்றும் மஞ்சள் காய்ச்சல் போன்ற நோய்களால் 7 லட்சம் மக்கள் இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

இந்த நோய்களின் அறிகுறிகள் என்ன?

மழைக்காலங்களில் நாம் கவனமாக இருக்க வேண்டும். மலேரியா, டெங்கு போன்ற கொசுக்களால் பரவும் நோய்களுக்கு கடுமையான உடல் வலி, கண்களில் வலி, வீங்கிய சுரப்பிகள் மற்றும் அரிப்புகள் போன்றவை அறிகுறிகளாக இருக்கும். பெரும்பாலும் டெங்கு நோயாளிகளுக்கு அரிப்புகள் இருக்கும். மலேரியா நோயால் பாதிக்கபட்டவர்களுக்கு கடுமையான குளிரும் அதிகப்படியான வியர்வையும் ஏற்படும்.

Leave A Reply

Your email address will not be published.