வசந்த முதலிகே மீண்டும் கைது

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் முன்னாள் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் முன்னாள் மாணவர் செயற்பாட்டாளர் இந்திக விதான பத்திரன ஆகியோர் குருந்துவத்தை பொலிஸாரால் இன்று பொரளை கனத்தை அருகே வைத்து (27) கைது செய்யப்பட்டுள்ளனர்.
27.02.2020 அன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற சட்டவிரோத கூட்டத்தில் அங்கம் வகித்தமை தொடர்பில் குருந்துவத்தை பொலிஸ் நிலையத்தில் இருந்து அளுத்கடை நீதிமன்றில் ஆஜராகாதமைக்காக 29.05.2023 அன்று பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. .
கைது செய்யப்பட்ட வசந்த முதலிகே மற்றும் இந்திக விதானபத்திரன ஆகியோரை நாளை (28) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.