மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர் சாவு!

மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர் சாவடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் மொனராகலை, தம்பகல்ல பிரதேசத்தில் நேற்று (27) மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் தம்பகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த தருஷ சந்தீப மற்றும் ருவன்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த சஸ்மித எஷான் ரணவீர ஆகிய பாடசாலை மாணவர்களே உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உறவினர்களான இரண்டு மாணவர்களும் 16 வயதுடையவர்கள் என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.