சிரியாவில் வெடிகுண்டு தாக்குதல் – 6 பேர் பலி.
சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதிக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஐ.எஸ். போன்று மேலும் சில பயங்கரவாத அமைப்புகளும் சிரியாவில் செயல்பட்டு வருகிறது. இந்த பயங்கரவாத குழுவை ஒழிக்க சிரியா அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதேபோல், அமெரிக்காவும், இஸ்ரேலும் சிரியாவில் பயங்கரவாதிகளைக் குறிவைத்து அப்போது வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை பயங்கரவாத அமைப்புகள் பொதுமக்களைக் குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் நடைபெறுகிறது. இந்நிலையில், சிரியாவின் டமாஸ்கஸ் பகுதியில் கார் அருகில் நிறுத்தப்பட்டிருந்த பைக் வெடிகுண்டு வெடித்தது.
இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 6 பேர் கொல்லப்பட்டனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்ட போலீசார் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் என அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.