வசந்த முதலிகே பிணையில் விடுவிப்பு!

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் இணைப்பாளர் வசந்த முதலிகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் இதற்கான உத்தரவை இன்று (28) பிறப்பித்துள்ளது.
வழக்கு ஒன்றில் நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தால் வசந்த முதலிகே நேற்று (27) பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.