உலக டெஸ்ட் தரவரிசை புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் முதலிடம்.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான புள்ளிப் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்தில் முன்னேறியுள்ளது.
பாகிஸ்தான் அணி இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் டெஸ்டில் பாகிஸ்தான் இலங்கை அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 222 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றியைப் பதிவு செய்தது.
இதன்மூலம், இலங்கைக்கு எதிரான தொடரை பாகிஸ்தான் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த டெஸ்ட் தொடர் வெற்றி மூலம் பாகிஸ்தான் அணிக்கு 24 புள்ளிகள் கிடைத்து முதல் இடத்தை கைப்பற்றியுள்ளது.
இதனையடுத்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான புள்ளிப் பட்டியலில் 16 புள்ளிகளுடன் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஆஸ்திரேலியா 26 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், இங்கிலாந்து 14 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், மேற்கிந்தியத் தீவுகள் 4 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.