எதிர்ப்பின் எதிரொலி : 20ம் திருத்தத்தில் மாற்றம் : மஹிந்த தரப்பு
தற்போது முன்வைக்கப்பட்டுள்ள 20வது திருத்தச் சட்ட வரைபுக்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் காணப்படும் கடும் எதிர்ப்பு காரணமாக குறித்த திருத்தத்தை நீக்கிவிட்டு புதிய யாப்பு திருத்தத்தை வர்த்தமானியில் வௌியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
“பிரதமர் கட்சித் தலைவர் கூட்டத்தை கூட்டினார். தற்போது முன்வைக்கப்பட்டுள்ள சட்ட வரைபில் உள்ள குறைப்பாடுகள் குறித்து நானும் இன்னும் சில கட்சித் தலைவர்களும் எடுத்துக் கூறினோம். அதன்பின் இது தொடர்பில் நீதி அமைச்சருடன் பேசுவதற்கு நாம் தயாரான போதும் முடியவில்லை.
அதன் பின்னரே தற்போது வௌியாகியுள்ள 20ம் திருத்த வரைபு வர்த்தமானியை பாராளுமன்றில் சமர்பிக்காமல் இருக்கவும் பிரதமர் அமைத்துள்ள குழுவில் இதுதொடர்பில் ஆராய்ந்து புதிய யாப்பினை உருவாக்கி அதனை வர்த்தமானியில் வௌியிட்டு பாராளுமன்றில் சமர்பிக்கவும் பிரதமர் முடிவு செய்தார்.
கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது” என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.