அமெரிக்க-ஆஸ்திரேலிய கூட்டுப் பயிற்சியின்போது ஹெலிகாப்டர் விபத்து.
ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் மாகாணத்தில் பெரிதளவில் ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, நாட்டின் வடகிழக்கு கடலோரப் பகுதியில் நீரில் விழுந்து ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
ஹெலிகாப்டர் நீரில் மூழ்கியதில், நான்கு ஆஸ்திரேலிய ராணுவ விமானக் குழுவைக் காணவில்லை என்று பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்ல்ஸ் தெரிவித்தார்.
எம்ஆர்எச்-90 தைபான் வகை ஹெலிகாப்டர் நேற்று இரவு விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் குறித்து கிட்டத்தட்ட 12 மணி நேரம் கழித்து பேசிய அமைச்சர் மார்ல்ஸ்,
“விபத்தில் சிக்கிய விமானக் குழுவை சேர்ந்த 4 பேரை கண்டுபிடிக்கவில்லை” என்றார்.
அதேவேளை தேடும் பணி தொடர்வதால், 30,000 பேர் கொண்ட அமெரிக்க-ஆஸ்திரேலிய தாலிஸ்மேன் சேபர் கூட்டுப் பயிற்சியை இடைநிறுத்தப்படுவதாக அறிவித்தனர்.