என்ன அழகுடா சாமி”… மேடையில் கியூட் ரியாக்ஷன் கொடுத்த பிக்பாஸ் ஜனனி.

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் தான் இலங்கை பெண்ணான ஜனனி. ஆரம்பத்தில் இவரின் நடவடிக்கைகள் ரசிகர்களை கவரும் விதமாக இருந்தாலும் ஏராளமானோர் ஜனனியை ஆதரித்தனர். தன்னுடைய எதார்த்தமான சிரிப்பாலும் குழந்தைத்தனமான செயல்பாடுகளாலும் பல ரசிகர்களுக்கு விருப்பமான ஒருவராக மாறினார்.
இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த இவர் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு இந்தியாவில் வசித்து வரும் இவர் தொடர்ந்து தனது க்யூட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். தளபதி 67 அதாவது லியோ திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் ஜனனி ஒரு நிகழ்ச்சியில் வெள்ளை மற்றும் கருப்பு நிற ஆடை அணிந்து மேடையில் நின்று கியூட் ரியாக்சன் கொடுத்துள்ளார். அப்போது தூரத்திலிருந்து பார்க்கும் போது ஜனனி கண்களுக்கு இதமான ஒரு மெல்லிய நிறத்தில் காட்சியளித்த நிலையில் தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.