ராகுலுக்கு பெண் பாருங்கள்! சோனியா

ராகுல் காந்திக்கு எப்போது திருமணம் என்ற கேள்விக்கு, சோனியா காந்தி சுவாரஸ்யமாக பதில் அளித்துள்ளார்.

அரியானா மாநிலம் சோனிபட் பகுதியைச் சேர்ந்த பெண் விவசாயிகளை சந்தித்த ராகுல்காந்தி, அவர்களது விருப்பத்தின்படி, டெல்லியில் உள்ள தமது வீட்டிற்கு அழைத்துச் சென்று விருந்து வைத்தார். அப்போது, அவர்களுடன் சோனியா காந்தி நடனமாடும் வீடியோ வெளியாகி அனைவரையும் கவர்ந்தது.

இந்நிலையில், இதுதொடர்பான புதிய வீடியோவை ஒன்றை ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார். அதில், ராகுல் காந்திக்கு எப்போது திருமணம் என்று பெண் ஒருவர் வெகுளித்தனமாக கேட்க, அதற்கு பதிலளித்த சோனியாகாந்தி, ‘நீங்கள் ஒரு பெண்ணை கண்டுபிடித்து தாருங்களேன்’’ என்று பதிலளித்துள்ளார்.

இதனை கேட்ட அங்கிருந்தவர்கள் மகிழ்ச்சியுடன் சிரித்தனர். சோனியா காந்தி அளித்துள்ள பதில் தொடர்பாக சமூக வலைளதங்களில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

இந்த நிகழ்வின்போது ராகுலின் சகோதரி பிரியங்கா உடன் இருந்தார். இதுதொடர்பாக ராகுல் தனது ட்விட்டர் பதிவில், ‘இந்த நாளை என் தாயாரால் என்றைக்கும் மறக்க முடியாது. எனக்கும் அப்படித்தான். என் இல்லத்திற்கு சிறப்பு விருந்தினர்கள் வந்திருந்தார்கள். அவர்களுடன் உரையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. நெய், இனிப்பான லஸ்ஸி, வீட்டில் தயாரிக்கப்பட்ட ஊறுகாய் உள்ளிட்ட பரிசுப் பொருட்களுடன் அன்பை அவர்கள் எங்களுக்கு அளித்தார்கள்.’ என்று கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.