ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் போட்டியின் ஆரம்ப நிகழ்வில் தேசிய கீதம் பாடப்பட்ட விதம் தொடர்பில் சட்ட நடவடிக்கை.
ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் போட்டியின் ஆரம்ப நிகழ்வில் தேசிய கீதம் பாடப்பட்ட விதம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
பிரபல பாடகி உமாரா சின்ஹவன்சா தேசிய கீதம் பாடுவதற்கு ஒரு புதிய முறையை சேர்த்துள்ளார் மற்றும் சமூக ஊடகங்களில் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தேசிய கீதத்தை ராப் அல்லது ரீமிக்ஸ் செய்ய முடியாது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உரிய தரப்பினருக்கு அறிவிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
தேசிய கீதத்தை பாடுவதற்கு ஒரு நிலையான முறை இருப்பதாகவும், இந்த போக்குகள் அனுமதிக்கப்படுமானால், எதிர்காலத்தில் தேசிய கீதம் நிர்வாணமாக பாடப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் அமைச்சர் கூறினார்.
மாத்தா (தாயே) என்பதை இவர் மகத்தா (ஐயா) என வேறு உச்சரித்து பாடுகிறார்.