இளம் யுவதி கொடூரமாக வெட்டிக்கொலை! – முன்னாள் காதலன் வெறியாட்டம்.

இளம் யுவதி ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் கம்பஹா – மினுவாங்கொடை பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
அப்பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய ஆர்.ஷிராந்தி என்ற யுவதியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
ஷிராந்தியின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் கத்தியுடன் சென்ற 26 வயதுடைய இளைஞர், அவரைச் சராமரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடியுள்ளார்.
முன்னாள் காதலனான சந்தேகநபரைக் கைது செய்வதற்கான விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.