மன்னார் புகையிரத நிலையம் பதினான்கு நாட்களுக்கு மூடப்படுகிறது.
மன்னார் பிரதான புகையிரத நிலையபகுதி கொரோன பரவல் அச்சம் காரணமாக இன்றில் இருந்து பதின்நான்கு நாட்கள் மூடப்பட்டுள்ளதுடன் குறித்த புகையிரத நிலைய ஊழியர்களும் பாதுகாப்பு காரணங்களுக்காக புகையிரத நிலையத்திலே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கந்தக்காடு புணர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பித்து வந்த நபர் ஒருவர் நேற்றையதினம் மன்னார் செளத்பார் பகுதியில் இராணுவத்தினால் பிடிக்கப்பட்ட நிலையில் குறித்த நபர் புகையிரத நிலையத்தை சூழவுள்ளபகுதியில் நடமாடிதிரிந்ததையடுத்து மன்னார் பிரதான புகையிரத நிலையம் முற்றிலும் மூடப்பட்டுள்ளதுடன் கொழும்பில் இருந்து மன்னார் வரும் புகையிரதங்களும் தரித்து நிற்காமல் செல்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படுள்ளது.
அதே நேரத்தில் நேற்றைய தினம் புகையிரத நிலையத்தில் கடமையில் இருந்த ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் நாளையதினம் புகையிரத நிலைய ஊழியர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
மேலும் இன்றையதினம் புகையிரத நிலைய பகுதிகளை சூழ மன்னார் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகளினால் கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது