உலக தரத்துடன் கட்டப்படவிருக்கும் ஜம்மு புதிய விமான நிலையம்
ஜம்முவில் உள்ள தற்போதைய விமான நிலையத்தை ரூ.523 கோடியில் விரிவாக்கம் செய்யும் பணிக்கான ஒப்பந்தப் புள்ளி மத்திய அரசால் கோரப்பட்டிருக்கிறது.
ஆண்டுக்கு 45 லட்சம் பயணிகளை கையாளும் வகையில், தற்போதிருக்கும் நிலப்பரப்பை விட நான்கு மடங்கு பெரியதாக, புதிய விமான நிலையம் அமையவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பயணிகள் விமான நிலையம் வரவும், விமான நிலையத்திலிருந்து வெளியேறவும் தனித்தனி வழிகள், பல தொழில்நுட்ப வசதிகளுடன் அமையவிருக்கிறது.
இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியிலிருந்து வெறும் 14 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளதாக, ஜம்மு விமான நிலையம், மிகுந்த பதற்றமான மற்றும் பாதுகாப்பு நிறைந்த விமான நிலையங்களில் ஒன்றாக உள்ளது.
தற்போது, 24 விமானம் தரையிறங்கும் தளங்கள், 24 புறப்படும் தளங்களுடன் ஆண்டுக்கு 12 லட்சம் பேரை கையாளும் வகையில் உள்ளது. இது 57 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் விரிவாக்கம் செய்யப்படவிருக்கிறது.