விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததால் செந்தில் பாலாஜி கைது..!
ஆட்கொணர்வு வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் மனைவி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரனைக்கு வந்தபோது அமலாக்கத் துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.
அப்போது, “செந்தில் பாலாஜி விசாரணை நடத்த விடாமல் அனைத்து வகைகளிலும் தடுத்தார், இடையூறுகளை விளைவித்தார். விசாரனைக்கு தொடர்ந்து ஒத்துழைக்க மறுத்ததால் அவர் அதிகாலை 1.39 மணிக்கு கைது செய்யப்பட்டார். செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் உள்ளதால் விசாரணைக்கு உட்படுத்த முடியவில்லை. எனவே உச்சநீதிமன்றம், அவர் மருத்துவமனை மற்றும் நீதிமன்ற காவலில் உள்ள இந்த காலகட்டத்தை முதல் 15 நாட்களாக எடுத்துக்கொள்ளக்கூடாது” என்று தெரிவித்தார்.
தற்போது அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்றும், கஸ்டடி வழங்காவிட்டால் விசாரணை பாதிக்கப்படும் எனவும் கூறிய அவர், “கைதுக்கான காரணங்களை ஏற்கனவே கூறிவிட்டோம். அமலாக்கத் துறை விசாரணை ஏன் தேவைப்படுகிறது என்பதற்கான காரணங்களையும் விளக்கிவிட்டோம். தான் தாக்கப்பட்டதாக செந்தில் பாலாஜி கூறினாலும் உடலில் எந்த காயங்களையும் அவர் நீதிபதியிடம் காட்டவில்லை” என்று வாதங்களை அடுக்கினார்.
தொடர்ந்து வாதங்களை துஷார் மேத்தா அடுக்கி வருகிறார்.