இந்திய எம்.எல்.ஏ.க்களின் சொத்து மதிப்பு மட்டும் இவ்வளவா..?
இந்தியாவில் 4 ஆயிரத்து ஒரு சட்டமன்ற உறுப்பினர்களின் சொத்து மதிப்பு மட்டும் 54ஆயிரத்து 545 கோடி ரூபாய் என்று ஆய்வறிக்கை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பும், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் ஆகியவை இணைந்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் இந்தியா முழுக்க உள்ள 4 ஆயிரத்து 33 சட்டமன்ற உறுப்பினர்களின் சொத்து மதிப்புகள் ஆய்வு செய்யப்பட்டன.
கடந்த சட்டமன்றத் தேர்தல்களின்போது தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்களின் அடிப்படையில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 28 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் இந்த ஆய்வறிக்கைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்படி 4ஆயிரத்து ஒரு எம்எல்ஏக்களின் சொத்து மட்டும் 54ஆயிரத்து 545 கோடி ரூபாய் அளவுக்கு உள்ளது தெரியவந்துள்ளது.
இந்த தொகையானது நாகாலாந்து, சிக்கிம், மிசோரம் மாநிலங்களின் மொத்த பட்ஜெட்டான 49 ஆயிரத்து 103 கோடியை விட அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.